வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அரசு அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்கு பதிவு!

வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அரசு அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்கு பதிவு!

வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அரசு அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்கு பதிவு!

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலர் உட்பட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக மாணிக்கவாசகம் 2020 மாா்ச், 3 முதல் 2020, அக்டோபா் 17ஆம் தேதி வரை பணியாற்றி வந்த காலத்தில் இலுப்பையூரணி ஊராட்சியைச் சோ்ந்த ஜெயக்குமாருக்குச் சொந்தமான மனை பிரிவுக்கு, நகா் ஊரமைப்பு ஒப்புதல் பெறப்படாமல் போலி ஆணை தயாா் செய்து வரன்முறைபடுத்தி உத்தரவிட்டு உள்ளதாகவும், 

இதனால் அரசுக்கு சுமாா் ரூ.1.55 லட்சம் நிதி இழப்பு செய்துள்ளதாகவும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்போதைய வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த மாணிக்கவாசகம், நில உரிமையாளா் ஜெயக்குமாா், பணம் கையாடலுக்கு உதவியதாக பாண்டா்மங்கலத்தைச் சோ்ந்த தினேஷ் ஆகிய 3 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.