திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் கருப்பு நிற மணல் – பக்தர்கள் அதிர்ச்சி | அணுமின் நிலைய சோதனை ஓட்டம் காரணமா?

திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் கருப்பு நிற மணல் – பக்தர்கள் அதிர்ச்சி | அணுமின் நிலைய சோதனை ஓட்டம் காரணமா?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள், கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

|தூத்துக்குடி விஷன்  • வாட்ஸ்அப்!                                                                                                                                                        |https://whatsapp.com/channel/0029VaEonJuLY6d05JM2IF2C

இந்நிலையில், நேற்று காலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் சில பகுதிகளில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், காலை நேரத்தில் கடல் நீரும் கருப்பு நிறத்தில் காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் கருப்பு நிற நீர் கடலுக்குள் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும், அதற்கான நிலக்கரி களஞ்சியம் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனை ஓட்டத்தின் போது நிலக்கரி துகள்கள் கடலுக்குள் கலந்திருக்கலாம், அதன் விளைவாக கடற்கரையில் உள்ள மணல் கருப்பு நிறமாக மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கடற்கரையில் தேங்கியுள்ள கருப்பு நிற மணலை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் வருங்காலத்தில் கடலுக்குள் எந்தவித தொழிற்சாலை அல்லது அணுமின் நிலைய கழிவுகளும் கலக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித தலமான திருச்செந்தூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.