முருங்கை காய் திருடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!!

முருங்கை காய் திருடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!!

முருங்கை காய் திருடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!!

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் முருங்கை காய்திருடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம்அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே வாகவிளையை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான முருங்கை தோட்டத்தில் நாங்குனேரி அருகே படர்ப்பாக்குளத்தை சேர்ந்தசெம்புலிங்கம் மகன் சங்கரலிங்கம் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் அடிக்கடி முருங்கைகாய் திருட்டு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளர் சுந்தர் ராஜன் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்தரத்தினப்பாண்டி மகன் ஆனந்த வேல்(38) என்பவரை தோட்டத்தில் முருங்கைகாய் திருடியதாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த சாத்தான்குளம் நீதிபதி கலையரசி ரீனா, முருங்கைகாய் திருட்டில் ஈடுபட்ட ஆனந்தவேலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.