இளைஞர்கள் கஞ்சா போதையில் டூவீலரில் தெருக்களில் அதிவேகமாக சென்று அட்டூழியம் -மூதாட்டி மீது மோதி விபத்து..!
இளைஞர்கள் கஞ்சா போதையில் டூவீலரில் தெருக்களில் அதிவேகமாக சென்று அட்டூழியம் -மூதாட்டி மீது மோதி விபத்து -பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட முயற்சி -ஓட்டப்பிடாரம் அருகே கீழ முடிமணில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பிரவீன்குமார், ராபின், ஆனந்த், ஆகியோர் டூவீலரில் தெருக்களில் அதிவேகமாக சென்றுள்ளனர் . மேலும் அவர்கள்கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மூதாட்டி செண்பகத்தம்மாள் என்பவர் மீது இளைஞர்கள் ஓட்டி சென்ற டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மூதாட்டியை காப்பாற்றியது மட்டுமின்றி, கஞ்சா போதையில் அதிவேகமாக தெருக்களில் டூவீலரை இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிவேகமாக டூவீலரை தெருக்களில் ஓட்டிய இளைஞர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் மேலும் மூதாட்டி செண்பகத்தம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் போலீசார் நான்கு பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.