தூத்துக்குடியில் பைக்கில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து: 4 பேர் கும்பல் வெறிச்செயல்!
தூத்துக்குடியில் பைக்கில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து: 4 பேர் கும்பல் வெறிச்செயல்!
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு, அவரது பைக்கிற்கு தீவைத்த 4பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஷா (28). இவர் இன்று அதிகாலை அப்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது மோட்டார் பைக்கை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த அன்வர்ஷா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவரை கத்தியால் குத்திய 4பேரை தேடி வருகின்றனர்.