விளாத்திகுளம் அருகே பள்ளி நிலத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!
விளாத்திகுளம் அருகே பள்ளி நிலத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
விளாத்திகுளம் அருகே பள்ளி நிலத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் இடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் வழங்கப்பட்டது. தற்போது பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஆட்சியர் உத்தரவின் பேரில் குழந்தைகளின் நலனை கருதி, அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி சிலர் பிரச்சினை செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இந்த இடத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டில் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அந்த பட்டாவை ரத்து செய்து, அந்த நிலத்தை பள்ளி நிர்வாகம் பெயரிலேயே கிராம கணக்கில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.