தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் 6 ஆவது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: 800 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு!!

தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் 6 ஆவது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: 800 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு!!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் 6 ஆவது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: 800 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு!!

தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 6-வது நாளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என் டி பி எல் அனல் மின் நிலையம் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து போராட்டம் 800 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.

தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் என் டி பி எல் அனல் மின் நிலையம் உள்ளது அங்கே சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இந்த அனல் மின் நிலையத்தில் சுமார் 300 பெண் ஊழியர்கள் என 1350 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் 

இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு என்எல்சி யில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி உத்தரவு பிறப்பித்தது ஆனால் இந்த உத்தரவை என்டிபிஎல் நிர்வாகம் அமல்படுத்தவில்லை 

இதைத்தொடர்ந்து ஊதிய உயர்வை என் டி பி எல் நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி இரவு முதல் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 1350 ஒப்பந்த ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தொழிலாளர்களுடன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் என்டிபிஎல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது 

இதைத்தொடர்ந்து என் டி பி எல் நிர்வாகத்தின் இந்த தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் இந்த விஷயத்தில் உடனடியாக தொழிலாளர் நலத்துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் மத்திய அரசு ஆகியவை தலையிட்டு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

இதைத்தொடர்ந்து இன்று என் டி பி எல் அனல் மின் நிலையம் முன்பு ஆறாவது நாளாக என் டி பி எல் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து நாளை கருப்பு குடி போராட்டம் என உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் 

ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிலையத்தில் சுமார் 800 மெகாவட்டும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல தலைவர் எஸ்.அப்பா துரை தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் பேச்சி முத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு தெர்மல் செயலாளர் கணபதி சுரேஷ் , நிர்வாகிகள் சங்கரன், பென்சில், என் டி பி எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், குணா, தமிழ்ச்செல்வன், ராம் குமார், கிருஷ்ணன் , முருகன், தொமுச சார்பில் NTPL சங்க அமைப்பாளர் அன்பழகன், திட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் சுந்தர், முத்து சாமி, சுடலை முத்து, சங்கர், இமான், சாமி கணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.