நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா!!
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பசுமை சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தேசிய மாணவர் படை மற்றும் தேசிய பசுமைப்படையின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவித்தார்.புதிதாக கட்டப்பட்டு, சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட நாற்கர முற்ற கட்டிடங்களின் முன் பகுதிகளை பசுமையாக்கும் வகைகளில் புன்னை மரக் கன்றுகள் நடப்பட்டன. ஏற்கெனவே, தேசிய பசுமை படை சார்பில் மூலிகை தோட்டம் சிறப்பாக பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தேசிய பசுமை படை பிரிவு பொறுப்பாளர் அம்புரோஸ் சுகிர்தராஜ் மற்றும் என்சிசி அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மரம் நடும் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.