பாத்ரூமில் வழுக்கி விழுந்து ஜவுளி வியாபாரி சாவு :தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் வீட்டின் கழிவறையில் வழுக்கி விழுந்த ஜவுளி வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மாரிமுத்து (51). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் கழிவறையில் தவறி விழுந்தாராம். இதில் தலையில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.