மின்வாரிய ஊழியர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம்

மின்வாரிய ஊழியர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஊழியர்களின் உரிமைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அனல் மின் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தை பொதுத்துறை ஆகவே தொடர செய்ய வேண்டும் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, 65 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே தொடங்கிட வேண்டும், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும், 1 12 2019 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டிய ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கு காலதாமதம் செய்யக்கூடாது, களப்பணி உதவியாளர்களாகிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பகுதி நேர ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு 

 திட்டத் தலைவர் வை .பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத்தலைவர் ஜெயசங்கர் போராட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மண்டலச் செயலாளர் S.அப்பாத்துரை, திட்டச்செயலாளர் குன்னிமலையான், சிஐடியு மாவட்டத்தலைவர் பேச்சி முத்து, திட்டநிர்வாகிகள் ரவித்தாகூர், M.இராமையா TNPEO திட்டத்தலைவர் S.வெங்கிடகிருஷ்ணன், திட்டச் செயலாளர் சேர்மன் , திட்டநிர் வாகிகள் அமுதா, P.கணேசன், S.கணேசன்,R.ராஜேஷ்.D.யோவான்.M.மரியதாஸ். K.அருணாச்சலம். ஆகியோர் பேசினர்.

அதேபோல் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி சுடலைமுத்து தலைமை வகித்தார். 

திட்ட செயாலாளர் எஸ்.கணபதிசுரேஷ், திட்ட பொருளாளர் செல்வி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.

தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் பீர் முகமது ஷா உரையாற்றினார்.