வழக்கறிஞர் படுகொலையை கண்டித்து மார்ச் 3 (நாளை) உண்ணாவிரதம்: பார் அசோசியேஷன் முடிவு!
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலையை கண்டித்து நாளை (மார்ச் 3) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலையை கண்டித்து நாளை (மார்ச் 3) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் பார் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க உறுப்பினர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்றம் முன்பு சங்கத்தின் சார்பில் 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 06.03.2023 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இரங்கல் கூட்டம் நீதிமன்றத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. காலவறையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் வரும் 06.03.2023 திங்கட்கிழமை வரை தொடர்கிறது. மேலும் 07.03.2023 சங்க உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லலாம் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.