மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!!
கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா 83வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரூ 4 லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா 83வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரூ 4 லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா கோவில்பட்டி ஜெயஸ்ரீ திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு கூட்டு வழிபாட்டில் மகளிர் குங்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன் ஓம் சக்தி கொடியை ஏற்றி வைத்தார். பேராசிரியர் இந்திராகாந்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பாரதி அடிகளார் அம்மா ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நலப்பணி விழாவிற்கு ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவர் சக்தி. ஆர்.முருகன் தலைமை வகித்து ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்து பிழைக்க தையல் இயந்திரங்கள், வெட்கிரைண்டர், மருந்து தெளிப்பான் கருவி, இட்லி பாத்திரம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மூன்றுசக்கர சைக்கிள், சைக்கிள், உபகரணங்கள் மற்றும் 320 பெண்களுக்கு சேலை, ஆடவர்களுக்கு வேஷ்டி துண்டு ஆகிய ரூ4 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட மகளிர் அணி பத்மாவதி தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், இணை செயலாளர்கள் முத்தையா, செல்லத்துரை, திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, இந்திராநகர்மன்ற தலைவி ராஜலெட்சுமி, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, வட்டத்தலைவர்கள் கோவில்பட்டி பால்ச்சாமி, அழகர்சாமி, தூத்துக்குடி செல்வம், ஸ்ரீவைகுண்டம் வண்டி மலையான், கழுகுமலை தலைவர் அழகர், தளவாய்புரம் ராஜ், தெற்கு ஆத்திக்குளம் காளைப் பாண்டி, கயத்தாறு சந்தனமாரி உட்பட மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.