தூத்துக்குடியில் பரபரப்பு... தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை!
தூத்துக்குடி போலீஸ் தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி போலீஸ் தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி அய்யனடப்பு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் கொடிவேல் (40), இவர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அங்குள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கொடிவேல் வீட்டில் படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவர் தூக்கில் தூக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடிவேல் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமைக் காவலர் தற்கொலை செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது