ஏற்றுமதி நிறுவன குடோனில் ரூ.3லட்சம் முந்திரி பருப்பு கொள்ளை : 5பேர் கைது!
தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன குடோனில் வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள முந்திரிபருப்பு மூட்டைகளை கொள்ளையடித்த வழக்கில் 5பேரை போலீசார் கைது செய்தனர்.