நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் தூத்துக்குடி டோல்கேட் கட்டணம் வசூல்: 4 மணி நேரம் முற்றுகை! நடந்தது என்ன?

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் தூத்துக்குடி டோல்கேட் கட்டணம் வசூல்: 4 மணி நேரம் முற்றுகை! நடந்தது என்ன?

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் தூத்துக்குடி டோல்கேட்டில் சுமார் 4 மணி நேரம் முற்றுகை போராட்டம் நடந்தது. 

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அரி ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 2 டோல் கேட்டுகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க தடை உத்தரவு நேற்று (03-06-25) பிறப்பிக்கப்பட்ட பின்பும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் fastag மூலம் வழக்கம் போல டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

தூத்துக்குடி - புதூர்பாண்டியபுரம் டோல்கேட்டிற்கு காலை 8.00 மணிக்கு சென்று NHAI அதிகாரிகளுடன் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தினோம். அவர்கள் தரப்பில் "நீதிமன்ற உத்தரவு கைக்கு வந்ததற்கு பின்பு தான் நடவடிக்கை எடுக்க முடியும், அதுவரை வசூல் செய்வோம்" என்றனர்.

"நீதிமன்றஉத்தரவு வருவதற்கு ஒரு சில நாட்கள் காலதாமதம் ஆகலாம். அதனால்தான் NHAI சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் உடனடியாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை ஏற்றுக் கொண்ட NHAI -ன் அரசு வழக்கறிஞரும் உடனடியாக NH ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கட்டண வசூல் நிறுத்தப்படும் என்று நீதிபதிகளிடம் கூறியுள்ளார். எனவேதான் டோல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது" என்றோம்.

மேலும் சுங்க கட்டணம் உயர்த்த NHAI உத்தரவிட்டால் உடனடியாக அமல்படுத்தும் நீங்கள் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றோம். ஆனால் NHAI தரப்பில் பிடிவாதமாக "நீதிமன்ற உத்தரவு இருந்தால்தான் எதுவும் செய்ய முடியும்" என்று கூறியதால் அதை அப்படியே நமக்கு எழுதித் தரக் கேட்டோம். ஆனால் அதற்கு நிர்வாகம் மறுத்து விட்டதால் நாமும் "டோல் கேட்டை விட்டு நகர முடியாது" என்று கூறிவிட்டோம். 

பின்பு பேச்சு வார்த்தைக்கு வந்த நிர்வாகம் 'சூட்சுமமாக' நீதிமன்ற உத்தரவு வந்ததற்கு பின்பு உரிய அதிகாரிகளிடம் உத்தரவு பெற்று அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிக் கொடுத்தார்கள். அதற்கு நமது தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பின்பு நிறுத்த வேண்டும், அதன் பின்பு உங்கள் நிர்வாகத்தின் உத்தரவு பெற்றுதான் நிறுத்தப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று உறுதிபடக் கூறினோம்.

அதன் பின்புதான் நாம் கோரிக்கை வைத்தபடி NHAI அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர். (இரண்டு வகை கடிதங்களும் பதிவிடப்பட்டுள்ளது) பின்பு நடந்ததை நிருபர்கள் / மக்கள் மத்தியில் விளக்கினோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்பு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.