கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கழுகுமலை மாணவருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்!
கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கழுகுமலை மாணவருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்!
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவன் ஹரிபிரசாத்தை ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த மாணவன் ஹரி பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்ட றிந்தார்.
பின்னர் திருமாவ ளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- காவல்துறைக்கு பொறுப்பு பள்ளி மாணவர்களி டையே இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுகின்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது அதிர்ச்சி யளிக்கிறது. இது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பெயர்கள் ஜாதி அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்ற கருத்து வரவேற்கக் கூடியது. அது மட்டுமே மாணவர்க ளிடையே ஜாதி உணர்வை தூண்டுகிறது என்பதை கருதி விட முடியாது. இது போன்று சம்பவம் நடை பெறாமல் முன்னெச்ச ரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு, குறிப்பாக காவல்துறைக்கு உள்ளது.
காவல்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. வன்முறையை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். இந்தியா கூட்டணி உருவான பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக நீதியை பேசக்கூடிய கட்சி கள் அகில இந்திய அளவில் ஒரே அணியில் திரண்டு விட்டனர் என்பதுதான் அவருக்கு ஏற்பட்டுள்ள அச்சம். எனவே தி.மு.க. உள்ளிட்ட சமூக நீதிகளை பேசும் கட்சிகளை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். எனவே அவர்கள் அவதூறு பரப்புவதை நான் பொருட் படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.