இறைவனைக்கு இழைக்கப்படும் அநீதியா தீபநெய்? முழு விபரம்..!

தீப நெய் உணவிற்கான பயன்பாட்டிற்கு அல்ல எனும் போது, உணவு பாதுகாப்புத் துறையின் கடமை இதில் என்ன உள்ளது என்று, இப்பதிவைப் படிப்பவர்களுக்கு ஐயம் எழுவது இயற்கை தான். ஆனால், அதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளது. கடந்த ஆண்டு முதல் தீபம் உள்ளிட்ட உணவற்ற தேவைகளுக்குப் பயன்படு......

இறைவனைக்கு இழைக்கப்படும் அநீதியா தீபநெய்? முழு விபரம்..!

தீப நெய் உணவிற்கான பயன்பாட்டிற்கு அல்ல எனும் போது, உணவு பாதுகாப்புத் துறையின் கடமை இதில் என்ன உள்ளது என்று, இப்பதிவைப் படிப்பவர்களுக்கு ஐயம் எழுவது இயற்கை தான். ஆனால், அதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளது. கடந்த ஆண்டு முதல் தீபம் உள்ளிட்ட உணவற்ற தேவைகளுக்குப் பயன்படும் எந்த வகை உணவுப் பொருட்களின் லேபிள் விபரங்களையும் உணவு பாதுகாப்புத் துறை கண்காணிக்க வேண்டும் என்பது முதல் பதில். அடுத்தது, தீப நெய் என்பதில் “நெய்” என்ற அடையாளப் பெயரின் காரணமாக, அதனை தவறுதலாக உணவாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், அதனைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை உணவு பாதுகாப்புத் துறைக்கு உள்ளது. 

1. தீப நெய் என்ற பெயரில் தயாரிக்கப்படும் ஒரு பொருளின் உள்ளடக்கப் பொருள் (Ingredients) விபரம்:

அ. வனஸ்பதி

ஆ. பாமாயில்

இ. உணவுத் தர செயற்கை மஞ்சள் நிறமி/தொழிற்சாலை தர நிறமி

ஈ. செயற்கை வாசனை திரவியம்.

2. பெரும்பாலான தீப நெய்யில், மருந்து அளவிற்குகூட நெய் சேர்க்கப்படுவதில்லை.

3. தீப நெய்யில், நெய் என்ற பதமும், நெய்யின் பதமும் இருந்தாலும், நெய்யே அதில் இல்லாததினால், நேற்றைய பதிவில் சொன்ன எந்தச் சோதனையிலும், தீப நெய் தேராது.

4. தீப நெய்யில், நெய் என்ற பெயர் மட்டுமே உண்டு என்பதால், அதனை அவசரத் தேவைக்கு கூட உணவிற்குப் பயன்படுத்துவது ஏற்றது அல்ல. ஏனெனில், தீப நெய்யில் செயற்கை வாசனை திரவியம்/தொழிற்சாலை தர நிறமி உள்ளது. அதனால், வயிற்றுப் பிரச்சினை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்.

நெய்யே இல்லாத ஒரு பொருளினை (பெரும்பாலும்), “தீப நெய்” என்று பெயரிட்டு, இறைவனுக்கு தீபம் ஏற்றுவது என்பது, நம்மை நாமே மட்டுமல்ல, இறைவனையும் ஏமாற்றும் செயலாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறைபக்தியில் நேர்மையைக் கடைப்பிடிக்கவும், சிறிதளவு உணவு நெய்யை மட்டும் வாங்கி தீபம் ஏற்றுவோம். அது வீடாக இருந்தாலும் சரி, வழிபாட்டு ஸ்தலமாக இருந்தாலும் சரி.

Also Read.... நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்... அப்போ கண்டிப்பா இதை படிங்க முதல்ல...!

பெரியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை, “வெண்ணெய்” (Butter) குறித்து பாரப்போம்..!

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,

நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.

For complaints: 9444042322.

++++++++++++++++++++++