ஆபரேஷன் சிந்தூர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் பட்டியல்.!

ஆபரேஷன் சிந்தூர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் பட்டியல்.!

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து விளக்கம் அளிக்க 7பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கு செல்ல உள்ளனர். 

ஆபரேஷன் சிந்தூரை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க, பல்வேறு நாடுகளுக்கு பல கட்சி பிரதிநிதிகளை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி இடம்பெற்றுள்ளார். 

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னணியில், ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இந்த மாத இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். 

பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிநிதிகளை வழிநடத்துவார்கள்:

1 சஷி தரூர், காங்கிரஸ்

2)ரவி சங்கர் பிரசாத், பாஜக

3)சஞ்சய் குமார் ஜா, ஜேடியு

4)பைஜயந்த் பாண்டா, பாஜக

5)கனிமொழி கருணாநிதி, திமுக

6)சுப்ரியா சுலே, என்சிபி

7)ஸ்ரீகாந்த் ஏக்நாத்

ஷிண்டே, சிவசேனா