சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சேவை நீட்டிப்பு: கோவில்பட்டியில் நின்று செல்லும்!!
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - நாகா்கோவில் இடையே வாரம் 4 நாள்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06067), சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.50-க்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
மறுவழித்தடத்தில் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20-க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 06068) அதேநாள் இரவு 11 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE