ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் திட்டம் துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் என்ற திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் திட்டம் துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் என்ற திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த செவ்வாடைத் தொண்டர்கள் ஜூன் 25-ஆம் தேதி இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக "மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல்” என்னும் திட்டத்தை செயல்படுத்திள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கையைப் பாதுகாக்கவும், உலகப் பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாணையின் வண்ணம் உலகம் முழுவதிலும் செவ்வாடைத் தொண்டர்கள் இணைந்து 25,000-ற்கும்  மேற்பட்ட மரங்களை நடுவதோடு மட்டும்  விட்டு விடாமல் அதனை நீர் ஊற்றிப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ள இருக்கிறார்கள். 3 மாதங்கள், 6 மாதங்கள், 9 மாதங்கள், ஒரு வருடம் என்று வளர்த்து, அதன் வளர்ச்சியை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்களைச் சேர்ந்த தொண்டர்கள் புகைப்படமாக எடுத்து ஆவணப்படுத்தவும் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் என்ற திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இந்திராநகர், திருவிக நகர், கோவில்பட்டி தீர்த்தாம்பட்டி உட்பட பல‌ பகுதிகளில் இன்று காலை மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு தலைமை வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் மரம் நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் நட்ட மரத்தைப் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இணைச்செயலாளர் செல்லத்துரை, வட்ட தலைவர்கள் செல்வம், தினேஷ், வேப்பலோடை முனியசாமி, திருவிக நகர் சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, மகளிர் அணி பிரமிளா, பத்மாவதி, கிருஷ்ணவேணி, செல்வி, சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், மந்திரம், பி.எஸ்.என்.எல். மாரியப்பன் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.