தடுப்பணைகள் அமைக்கும் பணிகள்: ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
முக்காணி கிராமத்தில் தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
முக்காணி கிராமத்தில் தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம் முக்காணி கிராமத்தில் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடங்களில் கடைசி தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டார். ஆய்வின்போது, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் கே.ஆதிமூலம், பேச்சி முத்து, திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் திருகுருசந்திரன், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, உதவி பொறியாளர்கள் திருரமேஷ், நவீன் பிரபு பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.