தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பான அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு அரசு அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில், இன்று (17.09.2026) தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுனன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கு.ரவீந்தரன், இரா.பேச்சிமுத்து, எஸ்.அப்பாத்துரை, த.சண்முகராஜ், தா.ராஜா, பா.புவிராஜ், இடைக்கமிட்டி செயலாளர்கள் தூத்துக்குடி மாநகர் எம். எஸ்.முத்து, தூத்துக்குடி ஒன்றியம் கே.சங்கரன், தூத்துக்குடி புறநகர் முனியசாமி, விளாத்திகுளம் ஜோதி, கோவில்பட்டி ஒன்றியம் தெய்வேந்திரன், திருச்செந்தூர் முத்துக்குமார், ஆழ்வார்திருநகரி ரவிச்சந்திரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட தலைவர் நேசமணி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராம் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.