பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் : கோவில்பட்டி இரட்டை சகோதரர்கள் அசத்தல்!

கோவில்பட்டியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று இரட்டை சகோதரர்கள் அசத்தியுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10வகுப்பு பயின்ற மாணவர்கள் ஹரிகரன், செந்தில் நாதன் (இரட்டையர்கள்) இருவரும் 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ள இரட்டை சகோதரர்களை அப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மாணவர் ஹரிகரன் தமிழில் 94, ஆங்கிலத்தில்91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் பாடவரியாக எடுத்துள்ளார், இதே போன்று மாணவர் செந்தில் நாதன் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணித்தில் 93, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 90 மதிப்பெண்கள் பாடவரியாக எடுத்துள்ளார். ஒரே மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ள இரட்டை சகோதரர்கள் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சங்கர் கணேஷ் அவர்களின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.