தூத்துக்குடியில் சிபிஎம் மூத்த தோழர் சங்கரய்யா பேனர் கிழிப்பு: சிபிஎம் கடும் கண்டனம்!
தூத்துக்குடியில் சிபிஎம் மூத்த தோழர் சங்கரய்யா பேனர் கிழிப்பு: சிபிஎம் கடும் கண்டனம்!
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என்.சங்கரய்யா பேனரை கிழித்த மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபி எம் மாநகர் செயலாளர் தா.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்:
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் அட்டூழியம் சாதரண ஏழை மக்கள் வீட்டு கல்யாணங்களில் அந்த மக்கள் வைக்கும் டிஜிட்டல் பேனர் களை கிழித்து எறிவதும் தகறாறு செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். நேற்று 01.06.23 வியாழன் அன்று தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் மாணிக்கம் மஹாலில் நடைபெற்ற திருமணத்திற்க்கு BJP மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் வருவதை வரவேற்று தூத்துக்குடி மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன அதையெல்லாம் கண்டுகொள்ளாத மாவீரர்கள் ASKR திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரேயொரு போர்டு சுதந்திரபோரட்ட வீரர் தோழர்.N.சங்கரையா படம் போட்டு வைக்கப்பட்டிருந்த போர்டை மாநகராட்சி மாவீரர்கள் கிழித்து எறிந்து சென்றிருக்கிறார்கள்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை முதல் தகைசால் தமிழர் விருது பெற்றவர் படத்தை கிழித்து எரிவது நியாயமா? தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் செய்தது சரியா? அண்ணாமலையை கண்டால் பம்முவதும் சங்கரையா போன்ற தலைவர்களை கிழிப்பதும் தான் உங்கள் வீரமா? இந்த செயலை செய்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். என தெரிவித்துள்ளார்.