மனைவியை கொன்றுவிட்டு கணவர் விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!

மனைவியை கொன்றுவிட்டு கணவர் விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!

சாத்தான்குளம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் மகன் பிரபாகர் பீம்சிங் (45). இவரது மனைவி ஆஷா (33). இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடன் பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகர் பீம்சிங், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.