போதையற்ற தமிழ்நாடு 1 கோடி கையெழுத்து இயக்கம்: திருச்செந்தூரில் தொடக்கம்!

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து திருச்செந்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

போதையற்ற தமிழ்நாடு 1 கோடி கையெழுத்து இயக்கம்: திருச்செந்தூரில் தொடக்கம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் DYFI போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து நடைபெறும் கையெழுத்து இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய பொறுப்பாளர்  ஆசாத் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.  

மாவட்ட செயலாளர் இ. சுரேஷ் கையெழுத்து இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேச, அதன்பின் திருச்செந்தூர் வட்டாட்சியர் உயர்திரு. சுவாமிநாதன் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உயர்திரு. நாகராஜன் மற்றும் உயர்திரு. இந்திரசூடன் ஆகியோர் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினர். 

முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்ச்செல்வன், நந்தகுமார், மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சிவதான்தாஸ், வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜான்சன், ரஜபுதீன் அஜ்மல், வினோத் சிவசங்கர் காவல்துறை அதிகாரிகள், வாலிபர் சங்க தோழர்கள் அரவிந்த் சிவசங்கர், அஜித்குமார், திருமாவளவன், பயணிகள், ஓட்டுனர்கள் வியாபாரிகள், பெரியவர்கள் என  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளும் விதமாக பங்கேற்று கையேழுத்திட்டனர்.

வாட்ஸ் ஆப் குரூப்பில் இனைய... 

https://chat.whatsapp.com/GH6dUyqDwutJ9WalcWvsDN