அனல்மின் நிலையப் பணியாளா் வீட்டில் லேப்டாப், செல்போன் திருட்டு: போலீஸ் விசாரனை!
குலசேகரன்பட்டினத்தில் அனல்மின் நிலையப் பணியாளா் வீட்டில் லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குலசேகரன்பட்டினத்தில் அனல்மின் நிலையப் பணியாளா் வீட்டில் லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பிரதீப் ராஜ் (21). இவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமணி அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலையில் அவரது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று பிரதீப் ராஜ் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியபோது அவரது அறையில் இருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் அவரது நண்பர்களான ரவி, பாரத் ஆகியோரின் செல்போன்களையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.