தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 2பேர் நீதிமன்றத்தில் சரண்!
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றங்களில் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றங்களில் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (வயது 43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ம் தேதி அவர் சோரீஸ்புரம் பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read.. தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!
இதனிடையே வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் போலீசாரால் தேடப்பட்ட ஆறுமுகநேரி சின்னதோப்பு கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (25), நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கீழகடையம் காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (30) ஆகிய 3பேர் மதுரை நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி சரண் அடைந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ரமேஷ் (40) உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் ஆறுமுகநேரியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜ் (22) என்பவர் சென்னை எழும்பூர் கோட்டில் சரணடைந்தார். இதில் ரமேஷ் ஏற்கனவே கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராஜேஷ் உடன் பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் ஆப் குரூப்பில் இனைய...