திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவில் மேளம் வாசிக்க வந்த மேளக்கலைஞர் சாவு: போலீஸ் விசாரணை!
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவில் மேளம் வாசிக்க வந்த மேளக்கலைஞர் சாவு: போலீஸ் விசாரணை!
திருச்செந்தூர் கடலில் மேளக்கலைஞர் பிணமாக மிதந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவை சேர்ந்த கணேசன் மகன் அந்தோணி ஆறுமுகம் (48). மேளக்கலைஞரான இவர் நேற்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் பால்குடத்திற்கு மேளம் வாசிக்க செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். காலை 6 மணியளவில் தியானம் மண்டபம் பின்புறம் உள்ள கடல் பகுதியில் அந்தோணி ஆறுமுகம் கடலில் பிணமாக மிதந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அவரது மகன் சுமன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ஆறுமுகம் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.