தூத்துக்குடி புத்தக திருவிழா நிகழ்ச்சியில் பரபரப்பு... இரு கட்சியினரிடையே வாக்குவாதம்!!
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில், திமுக மற்றும் பாஜகாவினர் இடையே கடும் வாக்குவாதம்; பரபரப்பு!.
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில், திமுக மற்றும் பாஜகாவினர் இடையே கடும் வாக்குவாதம்; பரபரப்பு!.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கரப்பேரி விலக்குப்பகுதியில் 4வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று (23) அன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தனித்தன்மையால் தமிழ்நாடு பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா, பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன், நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், அமெரிக்கை நாராயணன், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், அரசியல் விமர்சகர் பி.ஆர்.சீனிவாசன், திமுக மகளிரணி, சமூக வலைதள மாநில ஒருங்கிணைப்பாளர் யாழினி, கல்வியாளர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திமுக, பாஜக, விசிக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்தவர்களுக்கும் பாஜகவினர்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது..
பின்னர், தொடர்ந்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ், டவுண் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அவரவர் இருக்கையில் அமர வைத்தனர் அதன் பின் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.