தூத்துக்குடியில் 13.76 லட்சம் வாக்காளர்கள், 58,092 பேர் புதிதாக சேர்ப்பு: அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

தூத்துக்குடியில் 13.76 லட்சம் வாக்காளர்கள், 58,092 பேர் புதிதாக சேர்ப்பு: அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

தூத்துக்குடி: 2026ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 01.01.2026 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 19.12.2025 அன்று வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் 23.02.2026 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 624 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,71,742 பேர், பெண் வாக்காளர்கள் 7,04,689 பேர், இதரர்கள் 193 பேர் அடங்குவர்.

இந்த ஆண்டில் மட்டும் 58,092 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முகவரி மாற்றம் இறந்தவர்கள் 9626 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:

விளாத்திகுளம் – 2,03,732  ஆண் - 99913, பெண் - 103804, இதர - 15

தூத்துக்குடி – 248300, ஆண் - 120614, பெண் - 127623, 

 இதரர் - 63

திருச்செந்தூர் – 230702, ஆண் - 112367, பெண் - 118305 இதரர் - 30

ஸ்ரீவைகுண்டம் – 212885, ஆண் - 105099, பெண் - 107782 , இதரர் - 4

ஓட்டப்பிடாரம் – 240988, ஆண் - 117432, பெண் - 123502, இதரர் - 54

கோவில்பட்டி – 240017, ஆண் - 116317 , பெண் - 123673 இதரர் - 27 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை www.voters.eci.gov.in� என்ற இணையதளம் மற்றும் ‘Voters Helpline’ செயலி மூலம் சரிபார்க்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.