தூத்துக்குடியில் தொடர்ந்து 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் 4வது நாளாக மாவட்டம் முழுவதும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் மேலும் வங்கக் கடலில் மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 50 கிலோமீட்டர் வரை வீசும் என்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது
இதை தொடர்ந்து இன்று நான்காவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது