கிராமப்புற பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு! உடன்குடியில் இலவச சோலார் பயிற்சி தொடக்கம் – வேலைவாய்ப்புக்கு புதிய பாதை!

கிராமப்புற பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு! உடன்குடியில் இலவச சோலார் பயிற்சி தொடக்கம் – வேலைவாய்ப்புக்கு புதிய பாதை!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தேரியூர் பகுதியில், ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா மற்றும் PIGD & Radiance Renewables Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இலவச சோலார் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளன.

சோலார் பேனல் பொருத்துதல், பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களை பெண்கள் கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இந்த பயிற்சி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திட்ட நிறுவனர் திரு. ராபர்ட், திட்ட அமைப்பாளர் திரு. பிராங்க்ளின், திட்ட அலுவலர் திரு. பாலசுப்ரமணி, பயிற்சியாளர்கள் திரு. பிரகாஷ் மற்றும் திரு. முனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர்.

மேலும் திட்ட அலுவலர் திருமதி ஜெயா, திட்ட பணியாளர் திருமதி ஜெபா மற்றும் பலர் கலந்து கொண்டு கிராமப்புற பெண்கள் தொழில்நுட்ப துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பயிற்சி திட்டத்தை பாராட்டினர்.

இந்த இலவச சோலார் பயிற்சி திட்டம் கிராமப்புற பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், பொருளாதார சுயநிறைவும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.