மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்: க்ளைம் செய்வது எப்படி?
மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்: க்ளைம் செய்வது எப்படி?
யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷனுக்கான இலவச கால அளவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மெம்பர்ஷிப்பை பெற்றவர்கள் விளம்பரங்கள் மற்றும் பேக்ரவுண்ட் பிளே பேக்கை எந்த ஒரு விளம்பரங்களும் இன்றி கண்டு ரசிப்பதோடு, வேறு சில கூடுதல் பலன்களையும் பெறலாம்.
வழக்கமாக இந்தியாவில் இதற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 139 அல்லது மூன்று மாதங்களுக்கு ரூபாய் 399 என்று வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை பயனர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், இந்த ஆஃபர் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில எளிய படிகள் மூலமாக இந்த இலவச சப்ஸ்கிரிப்ஷனை நாம் கிளைம் செய்து கொள்ளலாம். அதனை எவ்வாறு செய்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்: க்ளைம் செய்வது எப்படி?
இதுவரை யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்யாத பயனர்களுக்கு இந்த ஆஃபர் காண்பிக்கப்படும். இந்த சப்ஸ்கிரிப்ஷனை செய்வது மிகவும் எளிது. உங்களது யூடியூப் அப்ளிகேஷனை திறந்து அதில் இருக்கக்கூடிய உங்களது ப்ரொஃபைல் ஐகானை தட்டவும், பின்னர் Get YouTube Premium என்பதை தேர்வு செய்யவும். இப்பொழுது 3-month offer என்பதை தேர்வு செய்து, பின்னர் 3-months free monthly subscription என்பதை கிளிக் செய்து, உங்கள் வங்கி விவரங்களை உள்ளிடவும்.
இப்போது நீங்கள் யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் கழித்து ஒரு மாதத்திற்கு ரூபாய் 129 செலுத்தி இதனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டணங்கள் தாமாக உங்கள் வங்கியில் இருந்து பெறப்படும் என்பதால் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முடிவடைவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாகவே நீங்கள் சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்து கொள்ளலாம். உங்களிடம் இரண்டு Gmail ID -கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தாத அகௌண்ட் மூலமாக யூடியூப் சப்ஸ்கிரைப்ஷனை நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம்.
யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பல்வேறு விதமான பலன்களை அளிக்கிறது:
மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பிற ஆடியோ ஸ்கிரீனிங் அப்ளிகேஷன்களை காட்டிலும் யூடியூப் பிரீமியம் பெறுவது ஒரு சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது. யூடியூப் மியூசிக் அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்துவதோடு, யூடியூப் அப்ளிகேஷனில் வரக்கூடிய வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் கண்டு கழிக்கலாம்.
யூடியூப்பின் மியூசிக் அப்ளிகேஷனில் நீங்கள் பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோக்களை காண்பது, லிரிக்ஸ் மற்றும் பிற அம்சங்களை பெற்றுக் கொள்ளலாம். 80 மில்லியனுக்கும் அதிகமான அதிகாரப்பூர்வ பாடல்களுக்கான விளம்பரங்கள் இல்லாத அணுகலை இதன் மூலம் நீங்கள் பெறுவீர்கள். இது பிக்சர்-இன்-பிக்சர் மோடு (Picture-in-Picture mode - PiP) ஆதரவை தருவதால் நீங்கள் யூடியூப் அப்ளிகேஷனை மூடிய பிறகும் அல்லது உங்கள் ஃபோனில் வேறு ஏதாவது செய்து கொண்டிருக்கும் பொழுது கூட நீங்கள் அதில் கண்டன்டுகளை காணலாம்.
இந்தியாவில் யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கான விலை
கால அளவை பொறுத்து யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷனுக்கான விலையானது மாறுபடும். மூன்று மாதத் திட்டத்திற்கு ரூபாய் 399, ஒரு மாதத்திற்கு ரூபாய் 129 மற்றும் 12 மாத திட்டத்திற்கு 1,290 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.