வேட்பாளரை மாத்துங்க!” – ஓட்டப்பிடாரத்தில் திமுகவினர் போர்க்கொடி… வெற்றிக்கனியை பறிக்கும் கனவில் அமமுக வேட்பாளர்..!

வேட்பாளரை மாத்துங்க!” – ஓட்டப்பிடாரத்தில் திமுகவினர் போர்க்கொடி… வெற்றிக்கனியை பறிக்கும் கனவில் அமமுக வேட்பாளர்..!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல், ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளராக, திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த ராமஜெயம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவுக்கு எதிராக உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஓட்டநத்தம் பகுதியில் ஏராளமான திமுகவினர் திரண்டு, “தொகுதியைச் சாராத நபரை ஏன் வேட்பாளராக அறிவிக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பி போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடந்த காலங்களில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, நீண்ட காலமாக தொகுதியில் செயல்பட்டு மக்கள் ஆதரவை பெற்றுள்ள மண்ணின் மைந்தர் எம்.சி. சண்முகையா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

“28 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த ஓட்டப்பிடாரத்தை உடைத்து கட்சியை வளர்த்தவர் சண்முகையா… அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை” என கட்சியினர் கடும் விரக்தி தெரிவித்துள்ளனர்.

இந்த உள்கட்சிக் குழப்பம் காரணமாக, ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது. இதே சமயம், எதிர்க்கட்சிகள் இந்த நிலையை அரசியல் வாய்ப்பாக பயன்படுத்தும் சூழலும் உருவாகியுள்ளது.

⚠️ திமுக தலைமையகம் இந்த எதிர்ப்பை எப்படி சமாளிக்கும்?

⚡ வேட்பாளர் மாற்றம் நடக்குமா?

என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

திமுக வில் நடைபெறும் இந்த போர்ச் சூழல் காரணமாக எதிர்த்துப் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் தனக்கு சாதமாக அமையும் என்ற அடிப்படையில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.