குவைத் தீவிபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல்!

குவைத் தீவிபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல்!

குவைத் தீவிபத்தில் இறந்த வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல் கூறி, தமிழக அரசு சார்பில் ரூ.5லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.

குவைத் நாட்டின் மங்கஃப் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் என்பவரது குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதில், கழுகுமலை பேரூராட்சித் துணைத் தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.