தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கல்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்க, வெகுஜன அரங்கங்கள், மற்றும் நடுத்தர அரங்கங்கள் சார்பில் ரூ.1,00,24,700 மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது என சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி ஒன்றியம், திருச்செந்தூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகிரி, கருங்குளம், உடன்குடி ஆகிய ஒன்றியங்களில் வீடுகள், வயல்களில் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும், உணவு, தங்கும் இடம், தண்ணீர் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
கடும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி முதல் மீட்பு பணி, உணவு, குடி தண்ணீர், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஜனவரி 2 ஆம் தேதி வரை 15 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 43வது வார்டு, 44வது வார்டு, 17வது வார்டு, தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், மாசிலாமனிபுரம், திம்மையார் காலனி, மற்றும் தூத்துக்குடி புறநகர் பகுதிகளான 53 வது வார்டு, கோவளம் மீனவர் காலனி, சன்முகபுரம், எம்.ஜீ.ஆர் நகர், சுந்தர் நகர், கக்கன் ஜி நகர், முள்ளக்காடு, சுனாமி காலனி, சூசை நகர், அகரம், மஞ்சள்நீர்காயல், தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான தாளமுத்துநகர், சோரீஸ்புரம், கோவில்பிள்ளைவிளை, ஜோதிபாசு நகர், புதுக்கோட்டை, திருவைகுண்டம் ஒன்றிய பகுதிகளான திருவைகுண்டம், காமராஜநல்லூர், ஆலடியூர், இந்திரா நகர், கனியான் காலனி, கே.டி.சி நகர், மேலக்கோட்டை வாசல் , ஜெயராமசந்திராபுரம், அதிசயபுரம், அரிபுரம், பராக்கிரமபாண்டி, முக்கானி, குருவித்துரை, மாங்கொட்டாரம், செதுக்குவாய்ந்தான், சொக்கப்பழங்கரை, சம்படி, மாரமங்களம்,
கருங்குளம் ஒன்றிய பகுதிகளான திருச்செந்தூர்பட்டி, ஆராபத் நகர், பக்கபட்டி, முத்தாரம்மாள்புரம், பொட்டலூரணி, செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகிரி ஒன்றிய பகுதிகளான ஆழ்வார்திருநகிரி, இரத்தினபூரி, தேமாங்குளம், செங்குளம், நொச்சிகுளம், ஆத்தூர், ஆத்தங்கரை, கீரனூர், தலைவன்வடலி, புன்னக்காயல், திருச்செந்தூர் ஒன்றிய பகுதிகளான திருச்செந்தூர், காயல்பட்டினம், தோப்பூர், உடன்குடி ஒன்றிய பகுதிகளான உடன்குடி, மாணிக்கபுரம், உள்ளிட்ட பகுதிகளில்
இதுவரை 10 ஆயிரத்து 602 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 10 ஆயிரத்து 133 குடும்பங்களுக்கு 850 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், 2 ஆயிரத்து 895 குடும்பங்களுக்கு போர்வை,கைலி, குழந்தைகளுக்கான ஆடை, 564 குடும்பங்களுக்கு சேலைகள், நான்கு நாட்களில் 23 ஆயிரத்து 960 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மொத்தம் 11 ஆயிரத்து 207 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 1 கோடியே 24 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வழங்கபட்டது. என கூறியுளளார்.