நண்பன் இறந்த துக்கம் தாங்காமல்; விஷம் குடித்த நண்பருக்கு தீவிர சிகிச்சை!

ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் அவரது நண்பர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சண்முகராஜா (17). இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  

இதனிடையே சண்முகராஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பரான பேச்சிமுத்து மகன் பொன் இசக்கி (வயது 18) என்பவர் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.