வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை  மேயர் ஜெகன் பெரியசாமி தாெடங்கி வைத்தார். 

போதையற்ற தமிழ்நாடு, போதையற்ற தூத்துக்குடி" முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் வைத்து மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தூத்துக்குடி மாநகரத் தலைவர் ஜேம்ஸ், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான்சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி கவுன்சிலர் 43 வது வார்டு முத்துமாரி ரவி, SFI மாவட்ட செயலாளர்  கார்த்திக், DYFI மாவட்ட பொருளாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர் மற்றும் மாணவர் சங்க தோழர்கள் கிஷோர், அஜ்மல், ஆவுடையப்பன், மாதவன், நேசமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததான செய்தனர்.