தூத்துக்குடியில் தொழில் நஷ்டத்தால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை!

தூத்துக்குடியில் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டத்தால் லாரி டிரான்ஸ்போர் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் மகன் நவநீதகிருஷ்ணன் (48), இவர் தூத்துக்குடியில் விநாயகா லாரி டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டு லாரிகள் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லையாம். 

இதனால் மன வேதனை அடைந்த நவநீதகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.