தூத்துக்குடி அருகே பரிதாபம்... மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
தூத்துக்குடி அருகே பரிதாபம்... மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள மேலமடம், ஓடை தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் பேச்சிமுத்து (45). கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த பேச்சிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,