தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முத்தையாபுரம் பகுதியில் எருமை மாட்டிடம் மனு கொடுத்து போராட்டம்..!

முத்தையாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 தூத்துக்குடி மாநகராட்சி 53 வது வார்டுக்குட்பட்ட தோப்பு தெரு பிரதான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர் குழு உறுப்பினர் வன்னிய ராஜா தலைமையில் எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் 53வது வார்டு பகுதியில் தோப்பு தெரு, முஸ்லிம் தெரு, வரத விநாயகர் கோவில் தெரு, முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட சாலையை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கினை கண்டித்து இந்த பகுதியில் தரமான சாலை வசதி செய்து தரக்கோரி எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகர செயலாளர் ராஜா, புறநகர குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, பாக்கியராஜ், சக்திவேல், விஜயகுமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.