தூத்துக்குடியில் திமுக சார்பில் மே தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!
தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு மே தின நினைவுச் சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞரின் திருவுருவச் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தொழிலாளரணி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.