கோவில்பட்டி அருகே சிப்ஸ் நிறுவனத்தில் 240 லிட்டா் எண்ணெய் பறிமுதல்: புகாா் தெரிவிக்க‌ வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

கோவில்பட்டியில் சிப்ஸ் தயாரிப்புக்காக வைத்திருந்த லேபிள் ஒட்டப்படாத 240 லிட்டா் தேங்காய் எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி அருகே சிப்ஸ் நிறுவனத்தில் 240 லிட்டா் எண்ணெய் பறிமுதல்: புகாா் தெரிவிக்க‌ வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

கோவில்பட்டியில் சிப்ஸ் தயாரிப்புக்காக வைத்திருந்த லேபிள் ஒட்டப்படாத 240 லிட்டா் தேங்காய் எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்

 

தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நிா்வாக அலுவலா் மருத்துவா் மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு ஆகியோா் அடங்கிய குழுவினா், கோவில்பட்டியில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

 

அப்போது, ஒரு நிறுவனத்தில் சிப்ஸ் தயாரிப்புக்காக வைத்திருந்த லேபிள் ஒட்டப்படாத 240 லிட்டா் தேங்காய் எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து பகுப்பாய்வுக்கு அனுப்பினா். மேலும், உணவுப் பாதுகாப்பு குறித்த புகாா்களை வாட்ஸ்ஆப் எண் 94440-42322 அல்லது ஆட்சியரின் கைப்பேசி எண்- 86808-00900-க்கு நுகா்வோா் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.