மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு!
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் பந்தலை ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணகுமார் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட எம் சவேரியார் புரம் பிரதான சாலை, தாளமுத்து நகர் ஆர் சி ஆலய எதிரில் ஆகிய இடங்களில் வெயிலில் தாக்கத்தில் இருந்து மக்கள் பயன்பெரும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணகுமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் விழாவில் ஆர்சி ஆலய உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி ரவி என்ற பொன் பாண்டி, அவை தலைவர் ஜோசியர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசு ராஜா, சக்திவேல், வசந்தகுமாரி, கிளைக் கழக செயலாளர் முருகன், வேல்ராஜ், சந்திரசேகர், ஜோதிபாசு நகர் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மகளிர் அணி சண்முகத்தாய், மாரியப்பன், சமீர் வியாஸ் நகர், திமுக இளைஞரணி கௌதம், செல்வகுமார் உட்பட கழக முன்னோடிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.