தூத்துக்குடி மாநகராட்சி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரின் பிரதான கால்வாயான பக்கிள் ஓடையின் முகத்துவாரம் மற்றும் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே நடைபெற்று வரும் கான்கரீட், பேவர் பிளாக், வடிகால் பணிகள் மற்றும் கார் வேன் போன்ற வாகனங்கள் நிறுவதற்கான இடத்தை அகலப்படுத்துவதற்கான பகுதியையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகர சுகாதார அதிகாரி சுமதி, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின் ஜெயா, முத்து செல்வம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.