தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 15 லஞ்ச வழக்குகள் பதிவு : 8 பேர் கைது!
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 15 லஞ்ச வழக்குகள் பதிவு : 8 பேர் கைது!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 15 வழக்குகள் பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் பொது நிர்வாகத்தில் உள்ள ஊழலை கண்டறிந்து விசாரித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையை சேர்ந்த போலீசார், அரசு பணிகளில் முறைகேடுகளை தடுத்தும், ஊழலில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்று கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் சுமார் 15 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடியில் அதிகபட்சமாக 6 வழக்குகளும், தென்காசியில் 5, நெல்லையில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் தென்காசியில் அதிகபட்சமாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. லஞ்சப் புகாரில் சைபர் கிரைம் துணை கண்காணிப்பாளர், ஒரு இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த 2 பேர் என 4 போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.