கோவில்பட்டியில் ரூ.3 லட்சம் கேட்டு கோயில் பூசாரி கடத்தல்: போலீஸ் விசாரணை!

கோவில்பட்டியில் அரசு வேலைவாங்கித் தருவதாக ரூ.17லட்சம் மோசடி செய்ததால் வாலிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியில் ரூ.3 லட்சம் கேட்டு கோயில் பூசாரி கடத்தல்: போலீஸ் விசாரணை!

கோவில்பட்டியில் அரசு வேலைவாங்கித் தருவதாக ரூ.17லட்சம் மோசடி செய்ததால் வாலிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளஞ்சம்பூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் உமையலிங்கம் (34). இவா், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பாண்டவா்மங்கலம் தென்றல் நகரில் ஒரு ஆலயத்தை நிறுவகித்து வருகிறார். மேலும், தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், இவா் நேற்று முன்தினம் இரவு ஆலயத்தில் பூஜையை முடித்துவிட்டு வந்தபோது 7பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து உமையலிங்கத்தின் மாமனார் ராஜு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். 

இதனிடையே உமையலிங்கத்தை கடத்தியவர்கள் அவரை கோவில்பட்டி- சாத்தூர் சாலையில் இறக்கிவிட்டு சென்றனர். இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த வண்டி எண்ணை வைத்து கார் டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த செந்தில் மகன் மனோகர் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 

விருதுநகரைச் சேர்ந்த ரவிகுமார், மாரியப்பன் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உமையலிங்கம் ரூ.17 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டாராம். இதனால் அவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து உமையலிங்கத்தை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ரவிகுமார், மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், வடிவேலு, செல்வம், கார்த்திக் ஆகிய 6பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.