திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய பெண் பக்தர் காயம்..!

திருச்செந்தூர் கோயில் கடலில் நீராடியபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பக்தரை காவலர்கள் மீட்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பௌர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி செய்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இந்நிலையில் சென்னை, மூலக்கடை பகுதியை சார்ந்த உமாபதி என்பவரின் மனைவி பத்மாவதி (55) தனது உறவினர்களுடன் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட கடற்கரை காவல் நிலைய பெண் காவலர் முத்துக்கனி உடனடியாக கடலுக்குள் இறங்கி அப்பெண்ணை மீட்டு மேல் பகுதிக்கு கொண்டு வந்தார்.
உமாபதிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் மகாராஜா, கார்த்திக், சர்வேஸ்வரன், ஆறுமுக நயினார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் திருச்செந்தூர் கோயில் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.