அரசியல் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் : மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை!
தூத்துக்குடி மாநகரட்சியில் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: 2021 சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சி கொடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அத்தீர்ப்பை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மத பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒரு போல கருதி ஆக்கிரமங்களை அகற்றிட வேண்டும்.தூத்துக்குடி சிவன் கோவில் எதிரே உள்ள சாலையில் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அப்பகுதியில் இருக்கக்கூடிய மரங்களை அப்புறப்படுத்தாமல் நடைபாதை மேடை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.